பிக்பாஸ் வீட்டில் தியாகம் செய்கின்றேன் என்று விக்ரமன் மற்றும் ஏடிகே மீசை மற்றும் தலைமுடியை இழந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சுமார் 95 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.
இந்நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த வாரத்தில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிக்பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் வந்துள்ளனர். மேலும், கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு வெளியில் வந்த விருந்தினர்களால் சில டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் விக்ரமன் மற்றும் ஏடிகே இருவரும் தங்களது மீசை மற்றும் தலைமுடியை இழந்துள்ளனர். இதனை போட்டியாளர்கள் விரும்பி செய்தார்களா…? அல்லது கட்டாயப்படுத்தி செய்யக் கோரினார்களா…? அல்லது பழி தீர்க்க இது நடந்ததா..? என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான ப்ரொமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.