fbpx

’தளபதி 67’ படத்தை அறிவித்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்பிய படக்குழு..!! எங்கு தெரியுமா..?

‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணி அமையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

’தளபதி 67’ படத்தை அறிவித்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்பிய படக்குழு..!! எங்கு தெரியுமா..?

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும், லோகேஷ் உடன் இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி வசனம் எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமான டிக்கெட் புகைப்படத்தை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்திருப்பதால், ‘தளபதி 67’ புரோமோ டீசர் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அமைச்சர் நபா கிஷோரை சுட்டுக் கொன்றது ஏன்..? கைதான காவலர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Tue Jan 31 , 2023
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் அமைச்சரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, உதவி ஆய்வாளர் தன்னுடைய உறவினர் […]
அமைச்சர் நபா கிஷோரை சுட்டுக் கொன்றது ஏன்..? கைதான காவலர் பரபரப்பு வாக்குமூலம்..!!

You May Like