பிக்பாஸ் சீசன் 6-ல் அடிபட்டு வெளியே வந்த அசல்கோளாறு சங்கரை தாக்கும் விதமாக பாடல் இயற்றியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடிகளை வழங்கி மக்கள் மத்தியில் வைகைப்புயல் வடிவேலு என்று பெயர் பெற்று இன்றளவும் புகழப்பட்டு வருபவர் ’’வடிவேலு’’. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு எதிராக திமுக சார்பில் களம் இறங்கினார். அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதற்கு பின்னர் வடிவேலுக்கு திரையில் நடிப்பதற்கு ஆப்பு வைக்கப்பட்டது. பல பிரச்சனைகளை சந்தித்து வந்த அவர் பத்து ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை.
மீண்டும் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகின்றார். இதில் ’அப்பத்தா’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை எழுதியது அசல் கோளாறு.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள்… ’’நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கின்றேன். நாய்யாள நான் சிக்காளி ஆனேன்’’ என்ற வரிகள் இயக்குனர் சங்கரை தாக்கி எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் அவர் விளக்கம் அளிக்கும்போது வடிவேலு வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டது என்பது போல தெரிவித்துள்ளார். எனினும் இதன் காரணமாக அசல் மீது இயக்குனர் சங்கர் கடும் கோபத்தில் உள்ளாராம். பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் மோசமான பின்கருத்துக்கள் பெற்ற நிலையில் தற்போது இந்த ஒரு ’’கறுப்பு தழும்பு’’ விடாமல் துரத்துகின்றது. அசல் கோளாறு பட்டும் திருந்தாமல் அவர் வேலைகளை காட்டிவிட்டார் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது