முதல் திருமணம்தான் விவகாரத்தில் முடிந்ததே என அடுத்து திருமணம் செய்த நிலையில் தற்போது வீரம் நடிகரின் இரண்டாவது திருமணமும் முறிந்து போனதால் சோகத்தில் உள்ளார்.
தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக சிவா அறிமுகமானார். அதையடுத்து வீரம் , விஸ்வாசம் , வேதாளம் , விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் இவருக்கு மாஸ் ஹிட் தான். தற்போது சிவா, நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கி வருகின்றார். இவரது சகோதரர் பாலா. பாலாவும் சினிமாவில் உள்ளார். காதல் கிசுகிசு , அம்மா அப்பா செல்லம் , கலிங்கா உள்ளிட்ட படங்கிளல் அவர் நடித்துள்ளார்.

வீரம் படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அஜித்தின் செகோதர்களில் ஒருவராக அவர் நடித்திருப்பார். கடந்த 2016ம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது விவகாரத்தில் முடிந்தது. சில காலம் தனியாக இருந்த அவர் வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
எலிசபெத் என்ற மருத்துவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக தொடங்கிய சில காலங்களில் பிரச்சனை ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக மலையாள ஊடங்களில் தினமும் செய்திகள் வெளியானது. ஆனால் அது பற்றி பாலாவோ , எலிசபெத்தோ இதுவரை தகவல்களை வெளியிடவில்லை. இதனால் பாலா சோகத்தில் உள்ளாராம்.