fbpx

ராஜா குடும்பத்துப் பெண்..!! மினி அரசாங்கத்தையே நடத்திய மனிஷா கொய்ராலா..!! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்..!!

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக ரவுண்டு கட்டிய நடிகை மனிஷா கொய்ராலாவின், தற்போதைய 52 வயதான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல இவருடைய ரகசிய வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்திருக்கிறார். நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் ராஜா குடும்பத்துப் பெண் என்ற சீக்ரெட் தற்போது தெரியவந்துள்ளது. இவர், நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயத்தை செய்திருக்கிறார். ஒரு மினி அரசாங்கத்தை மனிஷா கொய்ராலா நடத்தி வந்துள்ளார்.

ராஜா குடும்பத்துப் பெண்..!! மினி அரசாங்கத்தையே நடத்திய மனிஷா கொய்ராலா..!! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்..!!

நேபாள நாட்டிற்கு பிற நாடுகளில் இருந்து பெண்களை கடத்தி வந்து பலான தொழில்களில் ஈடுபடுத்திய மாஃபியா கும்பலை இவர் மிகத் துணிச்சலுடன் கண்டுபிடித்து, போலீசில் கூண்டோடு சிக்க வைத்தார். அதுமட்டுமல்ல நேபாள நாட்டிற்கு பிழைப்பு தேடிவருபவர்கள், குறிப்பாக வட மாநிலத்திலிருந்து வந்த அகதிகள் தங்குவதற்கான வீடுகளையும் மனிஷா கொய்ராலா கட்டிக் கொடுத்திருக்கிறார்.

மேலும், பெண்களுக்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கக்கூடிய சானிட்டரி நாப்கினை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று அதற்காகவே சிறிய தொழிற்சாலையை அமைத்திருக்கிறார். ஏனென்றால், பல கிராமங்களில் நாப்கின் குறித்த விழிப்புணர்வு யாருக்கும் கிடையாது. அதனால் இவர் தன்னுடைய சொந்த தொழிற்சாலையில் அவற்றை உற்பத்தி செய்த கிராம பெண்களுக்கு பயன்படுத்த கொடுத்தார். இவர் கேன்சர் விழிப்புணர்விற்காக பல விஷயங்களை முன்னெடுத்து செயல்படுத்தினார். ஒரு கட்டத்தில் மனிஷா கொய்ராலா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு வந்து, ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு சூப்பர் ஹிட் படங்கள் ஆன இந்தியன், முதல்வன், பாபா போன்ற தமிழ் படங்களில் டாப் நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் படுக்கை அறை மற்றும் கிளாமர் காட்சிகளில் நடித்த கூச்சப் பட்டுக்கொண்டு, தன்னையே தைரியப்படுத்திக் கொள்ள முதலில் லேசாக மது அருந்த துவங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு, பின் கர்ப்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டார். அதன்பின் அமெரிக்காவில் ஒரு வருட சிகிச்சை மேற்கொண்டு, அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்த மனிஷா கொய்ராலா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுகளை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு மனிஷா கொய்ராலாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த பல ரகசியங்களை சமீபத்திய பேட்டியில் திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

Chella

Next Post

இந்தியாவே காத்து கிடக்கும் டாடா காரை பற்றிய ரகசியம் கசிந்தது...!

Wed Jun 21 , 2023
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை எலெக்ட்ரிக் (Electric) மற்றும் வழக்கமான […]

You May Like