விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்தார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனி உங்களிடம் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், விலகுவதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்யும்போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ஹுசைன் மணிமகேலையின் பண்ணை வீட்டின் பாலக்கால் பூஜை, கடவுளின் அருளாலும் கடின உழைப்பாலும் குட்டி பேரரசை உருவாக்க இருக்கிறோம். நாங்கள் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் இது மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள். அதை நடத்திக்காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.