தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிம்பு. ஆரம்பகாலங்களில் துருதுருவென கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரது குடும்பங்களிலும் ஒரு உறுப்பினராகவே மாறியவர். ஆனால், சில காலங்களாக சினிமா இவரை ஒதுக்கி வைத்திருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை உருவாக்கினார் சிம்பு. மாநாடு படம் சிம்புவிற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.
யாருமே எதிர்பார்க்காத அளவில் திரும்பி வந்தார். ஆரம்பகால படங்கள் பெரும்பாலும் அடல்ட் படங்களாகவே அமைந்தன. அதனாலேயே சிம்பு மீது வேறு மாதிரியான இமேஜ் கிரியேட் ஆகியிருந்தது. அதை மாநாடு திரைப்படம் மூலம் சுக்கு நூறாக உடைத்தார். அவர் படங்களில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த படமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் விளங்கியது. அந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். கதைப்படி சிம்புவுக்கு உதவியாளராக சமந்தா நடித்திருப்பார்.
இதே படம் தெலுங்கிலும் தயாரானது. த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம். ஆனால், அதில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜனனியாம். மூன்று நாள்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டாராம் ஜனனி. ஆனால் படக்குழு திடீரென சமந்தாவை இறக்கி ஜனனியை ஓரங்கட்டி விட்டதாம். அதன் பிறகு தான் அவன் இவன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். முதல் படமே ஹீரோயின் வாய்ப்பு என அம்மணி படுகுஷியில் இருந்தாராம்.