இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கின் ஹாரிபாட்டர் கதைகளின் ஒளி வடிவமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் நடித்திருந்த ராபி கால்ட்ரேன் என்பவர் மறைந்தார்.
மாயாஜால உலகை முக்கிய கதைக்களமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. உலகின் பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான புத்தகம் ஹாரிபாட்டர். பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றதால் இதை ஒளிவடிவில் தயாரிக்கப்பட்டது. இதில் சிறுவனாக டேனியல் ராட்கிளஃப் என்பவர் நடித்தார்.
இது மொத்தம் 8 பாகங்களைக் கொண்டது. இதில் நீளமான தாடி , கறுப்பு நிற தளர்வான உடையைணித்து வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராபி கால்ட்ரேன் , ரூபியஸ் ஹக்ட்ரிக் என்ற பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். 8 பாகங்களிலும் இவர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
72 வயதான இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இவரது மறைவுக்கு எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ’ராபி மிகவும் சிறந்த திறமைசாலி , முழுமையான நபர் , மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த பெருமை அவரது குடும்பத்தினருக்கும் அவரது குழந்தைகளுக்கும் எனது இரங்கல் ’’ என கூறி உள்ளார்.