fbpx

’கரகாட்டக்காரன்’ புகழ் நடிகை கனகாவின் வீட்டுக்குள் நடக்கும் மர்மம்..!! பகீர் கிளப்பிய உதவியாளர்..!!

தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் கனகா ஆகிய இருவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் இவர்கள் இருவருமே பிரபலமானது மட்டுமில்லாமல், கனகா இந்த திரைப்படத்தின் மூலம் தான் சிறந்த கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நடிகை கனகாவுக்கு வெற்றி திரைப்படமாக திகழ்ந்தது விரலுக்கேத்த வீக்கம். அதேபோல கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய நடிகை கனகா. ஆனால், இவரது உண்மையான பெயர் லட்சுமி பிரியா. திரைக்கு எடுப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய பெயரை கனகா என மாற்றிக் கொண்டார். இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நடிகை கனகா, முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் ஆன இரண்டு வாரங்களிலேயே கனகாவின் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார். அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தது மட்டுமில்லாமல் மீடியா பக்கம் முகம் காட்டாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு கணவர் விட்டுச்சென்ற பிறகு 2000இல் இரண்டு மலையாள திரைப்படம் மற்றும் 2006ஆம் ஆண்டு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கனகாவின் கணவரைப் போல தான் கனகாவின் தந்தை சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு அவர் சென்று விட்டார். இது ஒரு பக்கம் இருக்க நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அப்பொழுது கனகா பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது துணியில் தீ பட்டு வீடு எரிய ஆரம்பித்த நிலையில், தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது கனகா யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று கூறி கதவை அடைத்து விட்டார். ஆனால், கனகாவை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் கனகாவை மீறி அவருடைய வீட்டிற்குள் சென்றனர். அப்பொழுது அவருடைய வீட்டை பார்க்கும் பொழுது மூட்டை மூட்டையாக துணி இருந்தது. பெருநாளாக குடி இருக்காமல் இருந்த வீடு போன்று இருந்தது. ஏன் கனகா இப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு மர்மங்கள் மற்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முக்கிய காரணம் கனகாவுக்கு ஞாபக மறதி என்று கூறுவது மட்டுமில்லாமல் சிலரின் செய்கையால்தான் அவர் இப்படி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கனகாவின் உதவியாளரிடம் இதுகுறித்து கேட்கும் பொழுது அவருக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் நான் வாங்கிக் கொடுப்பேன். அவரை பார்த்துக்கொள்வேன். அவர் நன்றாக தான் இருக்கிறார். அவருக்கு ஏதும் பிரச்சனை கிடையாது. அவருக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்து தருவேன் என்று கூறினார். இவ்வாறு அவர் கூறிய வார்த்தையை பார்த்த ரசிகர்கள் இன்னும் சில மர்மங்கள் இதில் உள்ளது என்று ஆவலுடன் அதை தெரிந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Chella

Next Post

பிரதமர் பதவியேற்க கைலாசா கிளம்பிய ரஞ்சிதா..!! ஆவலுடன் காத்திருக்கும் நித்தி..!! இனி ஒரே ஜாலி தான்..!!

Thu Jul 6 , 2023
பிரபல நடிகை ரஞ்சிதா, பிரதமர் ஆகப்போகிறாராம். இதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. இது தொடர்பாக ஒரு போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில், உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில், உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில், இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் […]

You May Like