தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வசந்த் ரவி இருக்கிறார். இவரின் முதல் படம் தரமணி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து, ராக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகியிருந்த அஸ்வின்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
மேலும், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திலும் வசந்த் ரவி நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் மகனாக போலீஸ் அதிகாரியாக வசந்த் ரவி நடித்திருப்பார். இப்படி ஒரு நிலையில், வசந்த் ரவி குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளார். அதாவது வசந்த் ரவி வேறு யாரும் இல்லை தமிழ்நாட்டில் பாரம்பரிய மிக்க ஹோட்டல் குழுமமான நம்ம வீடு வசந்த பவன் நிறுவனர் ரவி முத்துகிருஷ்ணனின் மகன் தான்.
இந்த ஹோட்டல்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சமீபத்தில் தான் இந்த குழுமத்தின் 50 ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்த வசந்த் ரவி, இங்கிலாந்தில் Health Care Management படிப்பை முடித்துவிட்டு அப்பல்லோவில் மருத்துவராக பணியாற்றியுள்ளார். சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடியபோதுதான் தரமணி படம் அவருக்கு கிடைத்தது.

மேலும், இவருக்கு 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர், ரிஷிதா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் பல திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.