fbpx

விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்கும் ’ராஜா ராணி 2’ பிரபலம்..! யார் தெரியுமா?

ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்த நடிகர் சித்து சித் விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களைக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவளாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித்.

விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்கும் ’ராஜா ராணி 2’ பிரபலம்..! யார் தெரியுமா?

‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான இவர், தற்போது ‘ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். இந்த இடத்தை பிடிக்கச் சித்து சித், பல ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 6 ஆண்டுகளாக நடனக் கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றார். பின்னர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார். சித்து சித் நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்கும் ’ராஜா ராணி 2’ பிரபலம்..! யார் தெரியுமா?

சின்னத்திரையில் வெற்றி பெற்ற இவரும், தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கிப் பயணிக்க தயாராக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவேம் விரைவில் வெள்ளித்திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

நடிகை அமலா பாலுக்கு தொல்லை..! புகைப்படங்களை காட்டி மிரட்டல்..! முன்னாள் காதலன் கைது..!

Tue Aug 30 , 2022
நடிகை அமலா பாலுக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் தொழில் தொடங்கலாம் எனக்கூறி பண மோசடி செய்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர். நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்த வீடு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திரைப்படத் தொழில் தொடங்குவது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த பவிந்தர் சிங் தத் என்ற ஆண் நண்பருடன் நடிகை அமலாபாலுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், 2018ஆம் ஆண்டு விழுப்புரம், […]
நடிகை அமலா பாலுக்கு தொல்லை..! புகைப்படங்களை காட்டி மிரட்டல்..! முன்னாள் காதலன் கைது..!

You May Like