fbpx

மாஸ் காட்டும் ”மார்க் ஆண்டனி” படத்தின் போஸ்டர்..! வித்தியாசமான கெட்டப்பில் விஷால்..!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்துள்ளப் படம் ‘லத்தி’. காவல்துறை சேர்ந்தவராக இப்படத்தில் விஷால் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார் விஷால். சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, பிரபுதேவாவின் ‘பஹீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

மாஸ் காட்டும் ”மார்க் ஆண்டனி” படத்தின் போஸ்டர்..! வித்தியாசமான கெட்டப்பில் விஷால்..!

இந்தப் படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஷாலுக்கு ஜோடியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கதாநாயகி ரிது வர்மா நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் விஷாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

https://twitter.com/Adhikravi/status/1564126468749152256?s=20&t=BV8fjK2hAPEaSfJfaM-94A

Chella

Next Post

பேருந்தில் தொங்கியபடி பயணித்த ஒன்பதாம் வகுப்பு மாணவன்; தவறி விழுந்து பரிதாப சாவு..!

Mon Aug 29 , 2022
மதுரை மாவட்டம், ஆனையூரிலிருந்து அனுப்பானடி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளி செல்வதற்காக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதிவ் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன் என்பவர் பேருந்தின் முன் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்து பெத்தானிபுரம் அருகில் வந்த போது வளைவில் திரும்ப முயன்ற போது பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்த […]

You May Like