நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது ஜெயிலர். இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், கருத்து தெரிவித்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜெயிலர் படத்தை உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான் எனக் கூறியுள்ளார். அதாவது, சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்குத்தான் என்று சொல்லி, ரஜினி வைத்திருந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடுங்குவதற்கு விஜய் ரசிகர்கள் சதி செய்திருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதனால் தான் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிய காரணம். எனவே, ரஜினியின் ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் தான்” என பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.