நடிகர் சக்கரவர்த்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது சிறு வயதிலே சக்கரவர்த்தியின் உடலில் மாற்றம் வர தொடங்கி உள்ளது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதை தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார் சக்கரவர்த்தி.
ஆனால் அவருடைய அம்மா ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்கும் என்று சொல்லி கடந்து சென்றுள்ளார். ஆனால் பிறகு அது தொடர்ந்து கொண்டிருந்ததால் மருத்துவரிடம் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு உங்களுக்கு கர்ப்பபை இருக்கிறது என்று கூறியுள்ளார். பிறகு சில வருடங்கள் கழித்து அவருடைய ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியாகியிருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருக்கு ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பது தெரியவந்தது.
ஆணுறுப்பின் வழியாகவே சிறுநீரும் வெளியே வருகிறது. அதே வழியாக மாதவிடாயும் வெளியேறுவதால் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு கர்ப்பபையை ஆப்ரேஷன் செய்து அதனை அகற்றி உள்ளார். புற்றுநோய் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று இவருடைய ஆணுறுப்பை ஆப்ரேஷன் செய்து அகற்றி உள்ளார்.