மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ், லியோ திரைப்படத்தை விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக மாற்றுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் ஜீவாவும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கேமியோவாக நடிக்கிறாராம். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இறுதி காட்சியில் ஒரு சிலமிடங்கள் மட்டுமே லோகேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.