பிரபல பாலிவுட் நடிகர் ரயில் நிலையத்தில் எளிமையாக படுத்திருந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
இந்தியில் பிரபல நடிகரான சோனுசூட் ரயில் நிலையத்தில் படுத்திருக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வில்லன் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நபர். அருந்ததி , ஒஸ்தி, தேவி போன்ற படங்களில்நடித்துள்ளார்.
கொரேனா முழு அடைப்பின்போது கூட ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வாரி வழங்கினார். இதனால் எளிய மனிதர் என மக்களால் புகழப்பட்டார். தற்போது யார் உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்து வருகின்றார்.
மற்ற நடிகர்கள் போல இவர் இல்லாமல் ரயில் நிலையத்தில் படுத்திருந்து அதன் பின் லோக்கல் ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றிருக்கின்றார். ரயில் நிலைய குழாயில் தண்ணீர் குடித்த அவர்ரயிலில் ஏறி சென்ற போது அவருடன் பலரும் போட்டோ எடுக்க வந்திருக்கின்றார்கள். பொறுமையாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.