fbpx

‘கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே’..!! நடித்தால் அவுங்க கூடதான் நடிப்பேன்..!! அடம்பிடிக்கும் நடிகர்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவுக்கு கிடைக்கும் வரவேற்பை விட சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே, புதிய சீரியல்களை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி மும்முரம் காட்டி வருகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் அறிமுகமான ஒரு ஜோடி தற்போது வேற சேனலுக்கு மாறி இருக்கிறார்கள். ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ், ஆலியா மானசா தற்போது நிஜ வாழ்விலும் ஜோடியாக மாறி இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்க வந்த ஆலியா கருவுற்ற காரணத்தால் அந்த சீரியலை விட்டு விலகினார்.

கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே..!! நடித்தால் அவுங்க கூடதான் நடிப்பேன்..!! அடம்பிடிக்கும் நடிகர்..!!

தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ள அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் இனியா என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கியுள்ளார். அதேபோன்று நடிகர் சஞ்சீவ், ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது. ஆனால், இப்போது அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறாராம். ஏனென்றால், அவர் தன் மனைவியுடன் சீரியலில் ஜோடியாக நடிக்க விரும்புகிறாராம்.

கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே..!! நடித்தால் அவுங்க கூடதான் நடிப்பேன்..!! அடம்பிடிக்கும் நடிகர்..!!

அதனால் நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலை டீலில் விட்டுவிட்டு, இனியா சீரியலில் நடிக்க சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சஞ்சீவ். ஏற்கனவே விஜய் டிவியில் இப்படி ஒரு வேலையை பார்த்ததால்தான் அவர் சன் டிவிக்கு வந்தார். அங்கு இவர் நடித்து வந்த ஒரு சீரியலில் தன் மனைவியை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று பிடிவாத பிடித்து இருக்கிறார். ச்இதனால் விஜய் டிவிக்கும், அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இவர் சன் டிவி சீரியலில் நடிக்க வந்தார். தற்போது இங்கும் ஒரு பஞ்சாயத்தை அவர் கூட்டி இருப்பது சேனல் நிர்வாகத்திற்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. இப்படி போற இடமெல்லாம் அலப்பறையை கூட்டும் இவர்களை பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Chella

Next Post

BB Tamil..!! பிக்பாஸ் வீட்டுக்குள் அடிதடி? அசீம் பண்ண வேலைக்கு இந்த வாரம் ரெட் கார்டு கன்ஃபார்ம்..!!

Thu Dec 1 , 2022
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே ரூல்ஸை மீறி விளையாடுவது, அடுத்தவர்களை மதிக்காமல் மோசமாக இமிடேட் செய்வது, தினம் தோறும் சண்டை போடுவது என ஃபவுல் கேம் ஆடி வருகிறார் அசீம் என்கிற குற்றச்சாட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை கமல் அசீமின் அராஜக செயலை கண்டித்திருந்தார். இன்னொரு முறை இப்படி செய்தால், நானே ரெட் கார்டு கொடுப்பேன் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், அதையெல்லாம் மீறி […]
BB Tamil..!! பிக்பாஸ் வீட்டுக்குள் அடிதடி? அசீம் பண்ண வேலைக்கு இந்த வாரம் ரெட் கார்டு கன்ஃபார்ம்..!!

You May Like