முதல் படம் ஹிட் படமாக இருந்தும் அந்த இயக்குனரை கண்டுகொள்ள கூட ஆளில்லாமல் போவது தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், வாலி மற்றும் குஷி போன்ற ஹிட் படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர், வாலி படத்தின் போது உதவி இயக்குனராக பணியாற்றியதால் நடிகர் அஜித்துடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரை முதல் படத்திலேயே இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான தீனா தான் அந்த திரைப்படம். இப்படத்தின் மூலமாக தான் அஜித்துக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. ஆனால், தீனா திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இயக்குனராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரே தவிர அவருக்கு வேறு எந்த மரியாதையும் பாராட்டுகளும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.