fbpx

இந்த நடிகரின் மகன் உதவி கலெக்டரானார்… மகிழ்ச்சியில் தந்தை !!!

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த உதவி கலெக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல காமெடி நடிகரின் மகனுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றாராம்.

திருப்பூர் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரி நாதன் இடம்மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் பணி நியமனம் ஆகியுள்ளார். இதை அடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டராக இன்று காலை பதவி ஏற்று இருக்கின்றார்.

புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள இவர் காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகனாவார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம் சின்னி ..பொறுப்பேற்ற பின்னர் இவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் , திருப்பூர் மக்களுக்காக எனது உழைப்பு இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதல் கல்வியை முழுமையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி எனக்கூறினார்.

நடிகர் சின்னி ஜெயந்த், 90 ஸ் , 80ஸ்களில் முரளி , கார்த்தி போன்றி முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி உள்ளார். குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் , தயாரிப்பாளர் , இயக்குனர் , மிமிக்ரி கலைஞர் என பன் முகத்திறமை கொண்டவர். நடிகர் விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Next Post

சாதி பெயரை கூறி பஸ் ஸ்டாண்டில் நின்ற மாணவர் மீது தாக்குதல் ….

Wed Oct 19 , 2022
மயிலாடுதுறையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவரிடம் என்ன சாதி என கேட்டு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றார் 14 வயது சிறுவனான இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று […]

You May Like