fbpx

”இதெல்லாம் டப்பா காருன்னு கிண்டல் பண்ணாங்க”..!! சிவகார்த்திகேயனின் தங்கை வாங்கிய புதிய கார்..!! இது யாருன்னு தெரியுதா..?

நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் ஜெயிலர் படம் பெற்றுத்தந்த வசூல் வேட்டைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு சன் பிக்சர்ஸ் புதுசா செக், BMW கார் எல்லாம் பரிசாக வழங்கியது பற்றிய பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதை அப்படியே விட்டு விட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து சொந்தமாக புதிய கார் வாங்கிய பிரபலத்தை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மாவீரன் திரைப்படத்தில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸி. இவர், தற்போது புதிய புதுசா கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளார். டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் சான்ஸ் கொடுத்த நிலையில், மாவீரன் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸிக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிதி சங்கரை விட படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் மோனிஷா. முன்னதாக செகண்ட் ஹேண்டில் டப்பா வண்டி ஒன்றை அப்பா வாங்கி வைத்திருந்ததை பலரும் கிண்டல் செய்ததாகவும், அடிக்கடி அந்த கார் நின்று விடும் தள்ளிட்டுத் தான் போவோம் என்று குறிப்பிட்ட அவர், அதன் பிறகு செகண்ட் ஹேண்டில் ஒரு நானோ கார் வாங்கினோம்.

அதையும் யாருமே காராக நினைக்கவில்லை. பலரும் கிண்டல் பண்ணாங்க. மிடில் கிளாஸில் இருந்துக் கொண்டு கார் வாங்குவது என்பதே பெரிய விஷயம் தான். ஒரு வழியாக செப்டம்பர் 1ஆம் தேதி ஹுண்டாய் கார் வாங்கி விட்டேன் என முதல் ஆளாக அப்பாவை கார் ஓட்ட வைத்து அழகு பார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார் மோனிஷா பிளெஸ்ஸி.

Chella

Next Post

நிலவில் சொந்தமான நிலம் வாங்கிய இந்திய தொழிலதிபர்..!! உங்களாலும் வாங்க முடியுமா..? யாரை அணுக வேண்டும்..?

Sun Sep 3 , 2023
நிலவில் சொந்தமாக இடம் வாங்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதுமே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் ஒருவர் நிலவில் சொந்தமாக இடம் வாங்கியுள்ளார். இது பற்றிய சுவாரஸ்ய தகவலை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் கால் பாதித்தது மனித குலத்தில் வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. கடந்த 2 […]

You May Like