fbpx

’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த சேனல்களுக்கு இடையே தான் அதிக போட்டிகள் உள்ளன. இதில், விஜய் டிவி சிறப்பான பல நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள், கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர், நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக ரசிகர்களை சிறப்பான என்டர்டெயின் செய்து வருகின்றன. மேலும், இந்த சேனலின் தொடர்களான ராஜா ராணி, பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில், விஜய் டிவி நிர்வாகம் தற்போது புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

ஏற்கனவே விஜய் மியூசிக் என்ற ஒரு சேனலை நடத்திவரும் நிலையில், அடுத்ததாக யூத்களை கவரும் வகையில் புதிய சேனலை துவக்கவுள்ளது. ’விஜய் டக்கர்’ என்று அந்த புதிய சேனலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேனலின் ஒளிபரப்புகள் துவங்கவுள்ளன. விஜய் டக்கர் என்ற இந்த சேனலின் புதிய ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேனல் தான் இனிமேல் ட்ரெண்ட் செட்டராக அமையும் என்று அந்த ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.

’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

அதிகமான இளைஞர்கள் இந்தப் ப்ரமோவில் இணைந்துள்ளனர். அழகான பாடலும் டான்சும் இணைக்கப்பட்டுள்ளது. இது யூத்துக்கான சேனல் என்பதும் இந்தப் பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் டிவியில் இளைஞர்களை கவரும் வகையில்தான் அதிக நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இதில், தனியாக யூத்துக்கான சேனல் என்ற விளம்பரத்துடன் துவங்கப்பட உள்ள இந்த புதிய சேனல், ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Chella

Next Post

இனி மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஸ்கூல் பேக் எடுத்த செல்ல தேவையில்லை.. மாநில அரசு முக்கிய முடிவு..

Mon Sep 19 , 2022
பீகார் அரசு பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ (No bag day) விதியை அறிமுகப்படுத்த உள்ளது பீகார் மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர “நோ-பேக் டே” விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு முறையாவது, மாணவர்கள் மதிய உணவு பையுன் மட்டுமே பள்ளிகளுக்கு வருவார்கள். புத்தகங்களை எடுத்துச் […]
அரசுப் பள்ளிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை..! வெளியான பரபரப்பு அறிக்கை..!

You May Like