நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் ஹன்சிகாவுக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர் என தகவல்கள் வெளியாகிஉள்ளது.
ஜெய்பூரில் நடைபெற உள்ள திருமணத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டும் அழைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் இது பற்றிய முழுமையான தகவல் கிடைக்கவில்லை.
கடந்த 2003ல் வெளியான பாலிவுட் திரைப்படமான ’ஹவா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி. இவர் மாப்பிள்ளை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஏராளமான தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. முன்னதாக ஷக்கலக்க பூம் பூம் என்ற குழந்தைகள் நடித்து மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கு விருப்பமான தொடரில் நடித்துவந்தார்.
இந்தியில் ஹிருத்திக் ரோஷன், ப்ரீத்தி ஜிந்தாவுடன், ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ‘கொய் மில் காயா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார். கடைசியாக தமிழில் 100 என்ற படத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா மோத்வானி. அடுத்தடுத்து பிற மொழிப்படங்களில் 3 படங்களில் நடித்து வருகின்றார். இவர் முன்பு நடித்த மஹா என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக விஜய்சந்தர் தயாரிக்கும் படத்தில் நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.