கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, லியோ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வனில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேச வந்த நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா, கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது எனவும் கோவையில் தனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கும், கோவை மக்கள் பேசுகின்ற தமிழ் பிடிக்கும், அழகாக இருக்கும் எனவும் உணவு பிடிக்கும் என்றும், கோவையில் அமைதி எப்போதும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என தெரியவில்லை. எப்போதும் கோவையில் பாசிட்டிவிட்டி இருக்கும் என தெரிவித்தார்.
த்ரிஷா பேசும் போது குறிக்கிட்ட ரசிகர்கள் லியோ திரைப்பட்டதின் அப்டேட் கேட்டு ஆரவாரம் செய்ததை அடுத்து அப்டேட் சொன்ன நடிகை த்ரிஷா, “லியோவோட சூட்டிங்ல இருந்துதான் வரேன், லோகேஷும் உங்களோட தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க, மற்றதை லியோ ஈவன்ட்ல பேசலாம் என அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.