மலையாள திரையுலகின் இளம் நடிகை சானியா ஐயப்பன், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீயை திருமணம் செய்துக் கொண்டது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றதுடன் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில், மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான குயின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சானியா ஐயப்பன். தற்போது இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் ஒன்று இணையத்தை வட்டமடித்து வருகிறது.
ஆனால், உண்மையென்னவென்றால் நடிகர் ஸ்ரீ, சானியா ஐயப்பனுடன் இணைந்து இறுகப்பற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள திருமண காட்சியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதே படத்தில் இருவரும் ஆபிஸ் லிப்டில் செல்லும் ஒரு புதிய போட்டோவும் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த பிறகு ரசிகர்கள் அப்பாடா என பெருமூச்சு விட்டுள்ளனர்.