பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இது நடிகர் உதயநிதியின் கடைசிப் படமாகும். இவர் அரசியலில் கால் பதித்திருப்பதால் தான் சினிமாவை விட்டு விலகியுள்ளார். எதிர்காலத்தில் நடிப்பாரா என்று தெரியவில்லை.
இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து தனுஷ், ரஜினி, கமல் என பலரது பாராட்டுக்களையும் இப்படம் பெற்று வருகிறது. 5 நாட்களில் படம் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூல் சாதனை செய்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமான மாமன்னன் மூலம் நல்ல ஹிட்டை பார்த்துவிட்டார். அந்த சந்தோஷத்தில் தான் மாரி செல்வராஜுக்கு காரை எல்லாம் பரிசளித்தார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்காக ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.எதிர் வரும் நாட்களிலும் இப்படம் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.