fbpx

உதயநிதியின் ’மாமன்னன்’ திரைப்படம் எப்போது ரிலீஸ்..? வெளியான சூப்பர் அப்டேட்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், ‘மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அத்தனையும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி, வடிவேலு, மாரி செல்வராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மாமன்னன் படக்குழு திரைப்படத்தை வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடியா..? சும்மா போற போக்குல அடிச்சுவிட்டு போறாங்க..!! உதயநிதி கலகல பேச்சு

Wed Apr 19 , 2023
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் தக்‌ஷின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகை மஞ்சு வாரியர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ் திரையுலகில் 2007 முதல் 2022 வரை நான் […]

You May Like