‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 42’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன், யூவி கிரியேஷன் 2 நிறுவனமும் இணைந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படம் திரையரங்குகளில் வெளியாகும் உரிமம் மட்டுமே 500 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.
அதனை தொடர்ந்து தற்போது சூர்யா 42 திரைப்படம் மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன சாதனை என்றால், படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் ஒன்று இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களின் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். எனவே, சூர்யாவின் சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிக விலை கொடுத்து ஆடியோ உரிமையை விற்பனை ஆன திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது. எனவே, விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதியுடன் அந்த ஆடியோ நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.