சென்னை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் “வாத்தி”. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படம் தெலுங்கில் “சார்”என்றும், தமிழில் “வாத்தி” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் செய்கிறார். நூலி படத்தொகுப்பு நவின் செய்கிறார். இந்த படத்தில் கல்லூரி ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார்.
“வாத்தி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் தனுசின் பிறந்தநாளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் “வாத்தி” திரைப்படத்தை வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.