fbpx

ஓடிடி-யிலும் ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு..? எப்போது தெரியுமா..?

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சு தான் அதிகளவில் இருந்துள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வெளியான பிறகும், அதை பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. தற்போது வசூலில் யார் நம்பர் 1 என்கிற போட்டியும் ஒருபக்கம் நிலவி வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய்யும், அஜித்தும் தங்களது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில், தளபதி 67 பட ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏகே 62 பட ஷூட்டிங் அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளது.

ஓடிடி-யிலும் ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு..? எப்போது தெரியுமா..?

இந்நிலையில், பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய இரு திரைப்படங்களும் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது. இந்த இரண்டு படங்களும் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.75 கோடிக்கும், துணிவு படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கும் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சாலையில் கிடந்த மர்ம சூட்கேஸ்.. பதற வைக்கும் உடல் பாகங்கள்..!

Fri Jan 20 , 2023
மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார். அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

You May Like