வாரிசு படம் வெளியீட்டிற்கு முந்தைய வர்த்தகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது அனைவரையும் வாளை பிளக்க வைத்துள்ளது.
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய வர்த்தகம் குறித்த செய்திகள் தீயாய் பரவி வருகின்றது.
1. டிஜிட்டல்- 60 கோடி (அமேசான் ப்ரைம்)
2. சாடிலைட்- 50 கோடி (சன் டிவி)
3. ஹந்தி டப்பிங் – 32 கோடி Goldmines
4. ஒவர்சீஸ்- 32 கோடி
5. ஆடியோ- 10 கோடி
இது மட்டுமின்றி பிற மொழி படங்களின் உரிமம் என கிட்டத்தட்ட ரூ.280 கோடியை தாண்டி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற படங்களும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் பெரிய ஹிட் அடித்தன. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்தது. இவர்கள் இடையே வழக்கம் போல் அஜித் விஜய் படங்களும் வசூலை வாரி குவித்தன.
இந்நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் 2023 பொங்கல் அன்று வர உள்ளது. இரண்டுப்படங்களுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அஜித், விஜய் படங்கள் மோதல் என்பது 20 ஆண்டுகளாகவே தொடர்கிறது. இந்த ஆண்டு துணிவா? வாரிசா? என்பதை பொங்கலன்று தெரிந்துவிடும்.