சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
இந்நிலையில், kpy பாலா தனது சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”என்னுடய 5 வருட கனவு நினைவாகிடுச்சு. எப்படியாவது வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நினைச்சேன். என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேத்து எப்படியோ என் சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன். இதுக்கு அப்புறம் பெரியவங்க ஆட்டோல செக்கப்-க்கு ஆஸ்பத்திரி போக வேண்டாம். ஆம்புலன்ஸ்லயே போலாம்.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CuJw6FgPQbS/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
இது மட்டும் இல்லாம வீட்டை சுத்தி இருக்குற கிராமத்துல யாருக்கு எமர்ஜென்சி நாளும் இந்த ஆம்புலன்ஸ இலவசமா யூஸ் பண்ணிக்கலாம். அதுக்கு ஆகுற பெட்ரோல் காச நான் குடுத்துடுறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. என் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண எல்லாருக்கும் நன்றி. நான் யாருடைய வாழ்த்துக்காவது பதில் பண்ணலனா மிக்க சாரி. ரொம்ப மிக்க நன்றி. உங்க எல்லோருடைய ஆதரவுனாலதான் என்னுடைய கனவ சாதிக்க முடிஞ்சது. லவ் யூ”. என பதிவிட்டுள்ளார்.