fbpx

’Bombay Gangster ஆக விஜய்’..!! ’தளபதி 67’ படத்தின் மாஸ் அப்டேட்..!! மிரட்டலாக கதை எழுதிய லோகேஷ்..!!

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படம்பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜயின் பெயர் ராஜேந்திரன் என்றும் ஒருசிலர் விஜய ராஜேந்திரனாக இருக்கக் கூடும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இப்படம் அப்பா – மகனுக்கு இடையிலான உறவை பற்றிய கதை என்றும் படத்தில் 6 பாடல்களில் ஐந்து மெலடி பாடல்களாகவும், மேலும் ஒன்று ’ஆல் தோட்ட பூபதி’ பாடலை ரீமிக்ஸ் செய்யப்படுவதாகவும் படக்குழு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

’Bombay Gangster ஆக விஜய்’..!! ’தளபதி 67’ படத்தின் மாஸ் அப்டேட்..!! மிரட்டலாக கதை எழுதிய லோகேஷ்..!!

இன்னும் ’தளபதி 66’ படத்தின் சூடே தணியாத நிலையில், ’தளபதி 67’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதாவது, லோகேஷ் இயக்கும் ’தளபதி 67’ படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டராக வருகிறார். மாநகரம் படத்தின்போது ஒரு நேர்காணலில் பேசிய லோகேஷ், ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கதை பண்ணி வருவதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் விக்ரம் படத்தின் போஸ்ட் ரிலீஸ் விழாவில், உங்களின் அடுத்த படம் என்னவென்று கேட்டபோது, அப்போது எழுதிய கேங்ஸ்டர் படம் தான் என்று கூறினார். தற்போது அந்த கதை மும்பையில் இருந்து தொடங்க இருக்கிறது.

’Bombay Gangster ஆக விஜய்’..!! ’தளபதி 67’ படத்தின் மாஸ் அப்டேட்..!! மிரட்டலாக கதை எழுதிய லோகேஷ்..!!

தமிழ் சினிமாவின் கேங்ஸ்டர் என்றாலே மும்பை தான் நியாபகத்துக்கு வரும். பாட்ஷா, நாயகன் போன்ற படங்கள் அங்கு நடக்கும் கதையை வைத்துதான் மிகப்பெரிய ஹிட் கொடுத்தனர். இன்னும், 67 படத்தின் அப்டேட் வருவதற்கு சில நாட்களே இருக்கிறது. இதனால், விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பம் ஆகவுள்ளது. மேலும், தீபாவளிக்கு வாரிசு முதல் சிங்கிள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Chella

Next Post

நாடு முழுவதும் BSNL 5ஜி சேவை..!! இம்மாதத்திலேயே தொடக்கம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Fri Oct 7 , 2022
அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் 5ஜி சேவையை தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது. ஆனால், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக […]
வந்தாச்சு பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like