சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் நெல்சனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நெல்சன் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் மீதுள்ள நட்பின் காரணமாக அவருக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் விஜய்.
மேலும், ஜெயிலர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமே விஜய் தானாம். பீஸ்ட் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்கம் கொடுத்து அவரை அனுப்பி வைத்ததே விஜய் தான் என்று கூறப்படுகிறது. இதை நெல்சனே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி, எப்போதும் காலையில் லேட் ஆக எழுந்திருக்கும் நெல்சனை, ஜெயிலர் படத்தின் முதல்நாள் படப்பிடிப்புக்கு போன் போட்டு எழுப்பிவிட்டதே விஜய் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.