விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் இப்போது பெரிய திரையில் கலக்கி வருகின்றனர். சிலர் அதே சேனலில் பல ஷோக்களில் கலந்து கொண்டு ஆடியன்ஸை கவர்ந்து வருகின்றனர். அப்படி விஜய் டிவியின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவர் இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு நடித்தவர் தான் நாஞ்சில் விஜயன். இப்போதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வரும் அவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கும் மற்றொரு யூடியூப் பிரபலமான சூர்யா தேவி என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது அதற்கு எதிராக கருத்து தெரிவித்து பிரபலமானவர் தான் சூர்யா தேவி. அந்தத் திருமணம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதால், இவர் மீது வனிதா காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், அந்த விவகாரத்தில் நாஞ்சில் விஜயனுக்கும் பங்கு இருப்பதாக வனிதா தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நாஞ்சில் விஜயன், நானும் சூர்யா தேவியும் நண்பர்கள் தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதான நிலையில் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சூர்யா தேவி ரவுடிகளை தன் வீட்டிற்கு அனுப்பி தன்னை அடித்து துன்புறுத்தியதாக நாஞ்சில் விஜயன் போலீசில் புகார் அளித்தார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் தான் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அடித்ததாக பதில் புகார் கொடுத்தார். இப்படி மாறி மாறி இருவரும் புகார் அளித்த நிலையில், கடந்த 2020ஆம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் வந்து ஆஜராகும் படி நாஞ்சில் விஜயனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. அதன் பிறகு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் தற்போது காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வளசரவாக்கம் போலீசார் இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நாஞ்சில் சம்பத்தை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை செய்து வரும் போலீசார் விரைவில் அவரை நீதிமன்ற காவலில் அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.