மக்களின் பொழுதுபோக்காக எத்தனை சேனல்கள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி மக்களை ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி சீசன் 2-ஐ ரக்சன் மற்றும் விஜே விஷால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அந்த வகையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை இதில் பங்கு பெறுவதற்கு புகழ், மைனா, சுனிதா மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பொதுவாக விஜய் டிவி புகழ், பெண்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசுவதும், பழகுவதும், வழக்கமாக இருப்பது தான்.
அந்த மாதிரி இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, திடீரென்று அரங்கத்திற்குள் புகழை கைது செய்வதற்கு 2 போலீசார் வந்து விடுகிறார்கள். இவர்களைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். பின்னர், ஒன்னுமே தெரியாத போல் என்னாச்சு மேடம் என்று விசாரிக்கின்றனர். அதற்கு நாங்கள் புகழை கைது செய்ய வந்திருக்கிறோம். அவர் மேல் கம்பளைண்ட் வந்திருக்கிறது என்று கூறுகின்றனர்.
இதனைக் கேட்டதும் அங்கிருப்பவர்கள் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் வாங்க என்ன விஷயம் என்று கூறுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், அதற்கு போலீசார் எங்கள் கடமையை பண்ண விடுங்கள் என்று கோபத்துடன் சொல்கிறார்கள். இதை கேட்டதும் புகழ் இதெல்லாம் பார்க்க பிராங்க் மாதிரி இருக்கு. அப்படி ஏதாவது இருந்தால் முன்னாடியே சொல்லி தொலைங்க என்று டென்ஷனில் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.