fbpx

விதிகளை மீறிய ஷெரினாவுக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம்..!! எத்தனை லட்சம் தெரியுமா..?

விஜய் டிவியில் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் அழகி ஷெரினா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் மொத்தம் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்ததால், இவருடைய சம்பள விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அப்படி வைத்துப் பார்த்தால் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 7 லட்சத்தை பல்க்காக பெற்றுக் கொண்டு தான் வெளியேறி இருக்கிறார். கடந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய 5 நபர்களில் ஷெரினா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற இருக்கிறார். ஆனால், அதில் தான் தற்போது எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. எப்போதுமே வெளியேறுபவர் யார் என்று சொல்லப்படும் அந்த எவிக்சன் கார்டில் போட்டியாளர்களின் பெயர் தமிழில் தான் இருக்கும். ஆனால், இந்த வாரம் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.

விதிகளை மீறிய ஷெரினாவுக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம்..!! எத்தனை லட்சம் தெரியுமா..?

ஏனென்றால், நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறையே தமிழைத் தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்பதுதான். ஆனால், ஷெரினா ஆயிஷாவிடம் அடிக்கடி மலையாளத்தில் பேசுவது கடும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடந்தால் ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று ஆண்டவர் கடுமையாக கண்டித்தார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறினார் என்ற முக்கிய காரணத்தினால் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டிருப்பதை ரசிகர்களும் புரிந்து கொள்வதற்காகவே கமல் காட்டமாக நடந்து கொண்டார். ஆனால், விதிகளை மீறிய ஷெரினாவிற்கு விஜய் டிவி 7 லட்சத்தை சம்பளமாக கொட்டிக் கொடுத்திருக்கிறது.

Chella

Next Post

6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது இந்தியா!!

Thu Nov 10 , 2022
அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து   168  ரன்களை இந்தியா குவித்துள்ளது. 169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே […]

You May Like