விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் ’முத்தழகு’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் வைஷாலி தணிகா. இவர், சின்னத்திரையில் நுழைவதற்கு முன்பே சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ’கதகளி’ என்ற திரைப்படத்தில் வைஷாலி தணிகா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். இந்த சீரியல்களைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் வைஷாலி, சோஷியல் மீடியாவும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ”தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வளைவுகளில் கவனிக்காமல் தன்னுடைய ஓட்டுநர் காரை விபத்தில் சிக்க வைத்ததாக கூறியுள்ளார். அப்போது தான் சீட் பெல்ட் போட்டிருந்ததால், உயிர் பிழைத்ததாகவும், அது மட்டும் இல்லையென்றால், இது பெரிய விபத்தாக மாறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CwCLyN4qXJK/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==