தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முன்னதாக மன்சூர் அலிகானை கைதி படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது நிறைவேறாத நிலையில், தற்போது ‘லியோ’ படத்தில் அது நடந்திருக்கிறது. ஏற்கனவே மன்சூர் அலிகான் விஜய்யுடன் இணைந்து, நாளைய தீர்ப்பு, தேவா, செந்தூரப்பாண்டி, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வசந்தவாசல்’ படத்தில் நான் வில்லனாக நடித்தேன். இப்படத்திற்காக ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினேன். ஆனால், ஹீரோவாக நடித்த விஜய்க்கு 2 லட்சம் ரூபாய் தான் சம்பளம் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.