fbpx

வீட்டு ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

நடிகர் விக்ரம் வீட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், அவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார்.

வீட்டு ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக்-வர்ஷினியின் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு.. இந்த தேதியில் அறிவிப்பு வெளியாகும்..

Mon Sep 12 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு நவராத்திரியின் போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். ஜனவரி […]

You May Like