காதல் தேசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அப்பாஸ். இவரின் கேரியரில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. இறுதியில், அவர் துணை வேடங்களில் தான் நடித்தார். அப்பாஸ் தனது குடும்பத்துடன் நியூசிலாந்திற்குச் சென்று அங்கு புதிய வாழ்க்கையை நடத்தினார். எந்த ஒரு பிரபலமும் இல்லாமல் முற்றிலும் சாதாரண மனிதராக வாழ்ந்தார். பெட்ரோல் பம்ப் வேலை, டாக்சி ஓட்டுதல், கட்டுமானம் என வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த அவர் பல்வேறு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அவ்வாறு ஒரு பேட்டியில், நடிகர் விஷால் மீதான வெறுப்பு பற்றி கூறியிருக்கிறார். அதாவது, “செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனக்கு அவர் மீது கோபம் வந்தது. ஆனால், இப்போது நான் மன்னித்து விட்டேன். சந்தித்தால் வணக்கம் சொல்வோம். ஆனால், இனி விஷாலுடன் நெருக்கமாக இருக்க மாட்டேன். திரையுலகில் ஒருவருக்கொருவர் வலுவான நட்பை ஏற்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.
இப்படித்தான் பிரபல கிரிக்கெட் லீக் தொடங்கியது. ஆனால், அதன் இரண்டாவது சீசனில் இருந்து அவருக்கு ஏதோ நடந்தது. என்னைப் பற்றி பொய்யான விஷயங்களை எல்லோரிடமும் பரப்பினார். அதனால் தான் நான் அவரை விட்டு விலகி விட்டேன். அன்று நான் மிகவும் கவலைப்பட்டேன். என்றோ ஒரு நாள் அதை நான் மறப்பேன்“ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”முதலில் எனக்கு விஜய் படங்கள் பிடிக்காது. ஆனால், இப்போது பிடித்திருக்கிறது. தனது படங்கள் மூலம் சமூகத்திற்கு நல்ல செய்திகளை தருகிறார். மேலும், சூர்யாவின் இன்றைய சாதனைகளால் மகிழ்ச்சி அடைகிறேன்.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான போது சூர்யா முதலில் வெட்கப்பட்டார். பின்னர், அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிறைய. அவர் திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறந்து விளங்குகிறார். பணியின் மீதான அவரது நேர்மைக்கும் எனது பாராட்டு. சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவின் ஆதரவு ஒரு பெரிய காரணம். இந்த மாற்றத்திற்கு ஜோதிகா தகுதியானவர் என்று நான் நம்புகிறேன்“ என்று பேட்டி அளித்திருக்கிறார் அப்பாஸ்.