fbpx

நண்பனின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்..!! அப்படினா அதெல்லாம் உண்மை இல்லையா..?

தற்போது சினிமாவில் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் ’வெண்ணிலா கபடி குழு’. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் தன் நண்பனின் மரணத்தை பற்றி தற்பெருமை பேசி இருப்பது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. அதாவது, வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பனாக நடித்திருந்தவர் தான் ஹரி வைரவன். அதைத்தொடர்ந்து அவர் குள்ளநரி கூட்டம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

நண்பனின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்..!! அப்படினா அதெல்லாம் உண்மை இல்லையா..?

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்த அவர், கடந்த 6 மாத காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஏற்கனவே சுகர் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்த ஹரி வைரவன் சமீபத்தில் கிட்னி செயலிழப்பால் மிகுந்த அவதிப்பட்டார். இதனால், அவருடைய மனைவி ஒரு பேட்டியில் தன் கணவரை காப்பாற்ற உதவி செய்யும்படி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு திரை துறையைச் சேர்ந்த நண்பர்கள் யாரும் உதவி செய்யவில்லை. அவருடன் திரைப்படத்தில் இணைந்து நடித்த விஷ்ணு விஷால், சூரி கூட பணம் கொடுக்க முன்வரவில்லை. இதனால் ஹரி வைரவன் சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு விஷால் நினைத்திருந்தால் ஹரி வைரவனை எப்படியும் காப்பாற்றி இருக்க முடியும்.

நண்பனின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்..!! அப்படினா அதெல்லாம் உண்மை இல்லையா..?

ஆனால், அவர் அதை செய்யாமல் இப்போது தன்னுடைய அனுதாபத்தை மீடியாவில் பரப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் நான் ஹரிக்கு செய்த உதவி யாருக்கும் தெரியாது. அவனுடைய குழந்தைகளை கூட நான் படிக்க வைக்கிறேன் என்று ஹரியின் மனைவிக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்தார். ஆனால் ரசிகர்கள் அவருடைய விளக்கத்தை நம்பவில்லை. இத்தனை நாளாக இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நீங்கள் எதிர்ப்பு கிளம்பியதும் விளக்கம் கொடுக்கிறீர்களா? என்றும் உங்கள் பட விளம்பரத்திற்காக இதை செய்யாதீர்கள்… என்றும் கூறி வருகின்றனர். எது எப்படியோ நண்பர்கள் கூட கைவிட்ட நிலையில், இன்று ஒரு உயிர் பரிதாபமாக போயிருக்கிறது என்பதே நிதர்சனம். இனிமேலாவது நடிகர்கள் விளம்பரத்திற்காக இல்லாமல், மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Chella

Next Post

நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா..? விஜய் டிவி சீரியலில் தான் நடிக்கிறார்..!! யார் தெரியுமா?

Wed Dec 7 , 2022
பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். 1965ஆம் ஆண்டு ’இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென […]
நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா..? விஜய் டிவி சீரியலில் தான் நடிக்கிறார்..!! யார் தெரியுமா?

You May Like