fbpx

நடக்கக் கூட முடியாமல் தவிக்கும் VJ கல்யாணி..!! மீண்டும் அறுவை சிகிச்சை..!! இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு..!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான VJ கல்யாணி, ’அள்ளித்தந்த வானம்’, ’ரமணா’, ’ஜெயம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் ’பிரிவோம் சந்திப்போம்’, ’தாயுமானவர்’, ’ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகை கல்யாணி தனது இன்ஸ்டா பக்கத்தில் நடக்கக்கூட முடியாமல் செவிலியர்களின் துணையுடன் நடந்து வரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016இல் எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது காலம் நலமாக இருந்தேன்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பே முதுகுத் தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர், முன்னதாக நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை. இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். மேலும், வேறொருவரின் எலும்பு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இம்முறை நான் குணமடைய பல நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நின்றார். என்னுடைய 5 வயது மகள் என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்ப முடியவில்லை.

மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் விஜே கல்யாணி நன்றி தெரிவித்துள்ளார். நான் என் உடலை இனி முன்பைவிட நன்றாக கவனித்துக் கொள்வேன் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவைப் பார்த்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’இந்த தவறை செய்து உங்கள் ரேஷன் கார்டுக்கு நீங்களே ஆப்பு வச்சுக்காதீங்க’..!! யாரும் எதிர்பார்க்காத முடிவு..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Wed Aug 16 , 2023
தமிழ்நாட்டில் அடிக்கடி ரேஷன் பொருட்கள் திருடுபோவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை சிலர் திருடி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அரிசி […]

You May Like