fbpx

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது ’பத்து தல’யா..? ’விடுதலை’யா..? வெளியானது ரிப்போர்ட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்துக்கு போட்டியாக ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படமும் ரிலீஸ் ஆனதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

சிம்புவின் பத்து தல திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக் குவித்து வருகிறது. முதல் நாளில் இப்படம் ரூ.12.3 கோடி வசூலித்தது. நடிகர் சிம்புவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை பத்து தல படைத்தது. இப்படம் 4 நாள் முடிவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறார். மறுபுறம் இதற்கு போட்டியாக விடுதலை படமும் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சி கண்டு வருகிறது. முதல்நாளில் ரூ.6.5 கோடியும், இரண்டாம் நாள் ரூ.7.5 கோடியும் வசூலித்த இப்படம் 3 நாள் முடிவில் ரூ.23 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படமும் முதல் வார இறுதியில் ரூ.50 கோடி வசூலை அசால்டாக கடந்துவிடும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.

Chella

Next Post

சொத்துக்காக மாமனாரை போட்டுத் தள்ளிய மருமகள்..!! துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! திருச்சியில் அதிர்ச்சி..!!

Mon Apr 3 , 2023
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (85). இவருக்கு பெரியக்காள், கொழுந்தாயி என 2 மனைவிகள். முதல் மனைவிக்கு உழவன் என்ற உலகநாதன் என்பவரும், இரண்டாம் மனைவிக்கு கணேசன் என்ற மகனும் உள்ளனர். 2வது மனைவி கொழுந்தாயி இறந்துவிட்டார். பெரியக்காள் உயிருடன் உள்ளார். இந்நிலையில், மாணிக்கம் தனது சொத்துக்களை 2 மகன்களுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்ததாகவும், பின்னர் […]

You May Like