fbpx

‘காவாலா’ பாடல் எம்ஜிஆர் பாடலில் இருந்து சுட்டதா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! நீங்களும் பாருங்க..!!

ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.

இந்நிலையில், எப்போதும் போல் இப்பாடல் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றானர். அத்துடன் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

Chella

Next Post

போலந்து நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞர்

Sun Jul 9 , 2023
புதுக்கோட்டை பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியர். இவர்களது மகன் அருணகிரி என்ற அருண் பிரசாத் (22) என்பவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார். இந்விலையில், அங்கு அவர், கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹனியா என்ற அன்னாரில்ஸிகா என்ற பெண்ணுடன் […]

You May Like