fbpx

’கையில் பணம் இல்லை… கடன் வாங்கி செலவு பண்றோம்’..!! அந்த நிலைமை வந்தால் இதுதான் எங்கள் முடிவு..!! ராஜலட்சுமி ஓபன் டாக்..!!

நாட்டுப்புற பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான ராஜலட்சுமி செந்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டியில், “எங்களோட தொழில் நிறைய சவால் நிறைந்தது. என் கணவரோட சகோதரிக்கு பிரசவ நேரம். பயங்கரமான ரிஸ்கான சூழல். தாய், சேய் இருவரையும் காப்பாற்ற முடியாத நிலை. அப்போது, எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வேற சென்று விட்டோம். அது ஒரு திருமண வீடு. நாங்கள் அங்கு போய் தயாராகிக் கொண்டிருக்கும் போது திருமண வீட்டார் நெருக்கடி கொடுத்தனர்.

அவர்கள் திட்டவில்லை, உறவினர்கள் எல்லாம் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று எதார்த்த நிலையை கூறினார்கள். ஆனால், எங்களின் நிலைமை அங்கிருந்த யாருக்குமே தெரியாது. அங்கிருந்த அனைவரையும் ஜாலியாக சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து விட்டு தான் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தோம். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது.

நான் 2-வது குழந்தையை கருத்தரித்திருந்த நேரம், அடிக்கடி கிமோகுளோபின் பரிசோதிக்க வேண்டும். குறைந்தது 12 இருக்க வேண்டும். எனக்கு 6 அல்லது 7 தான் இருந்தது. தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அதே மாதிரி ஒரு நாள் போய் சோதித்துப் பார்த்தால், வெறும் 4 தான் இருந்தது. வீட்டுக்கு வந்தால் என் கணவர் பயங்கரமா அழுதார். தயவு செய்து மாத்திரைகளை ஒழுங்க எடு என்று அழுதார். எனக்கு தெரிந்து அவர் அழுது நான் பார்த்தது, அந்த நாளில் தான்.

மற்ற துறைகளை விட மீடியா துறையில் உள்ள கணவர், மனைவிகளுக்கு விமர்சனங்கள் எளிதில் வரும். உதாரணத்திற்கு ‘என்னங்க அண்ணனே பாடிட்டு இருக்காரு.. நீங்க எதுவுமு் பாடுறது இல்லையா?’ என்று கேட்பார்கள். இதே போல அவரிடமும் கேட்கலாம். ஆனால், அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. மீடியாவில் உள்ள தம்பதிகளின் பிரச்சனைகளை இன்று அதிகமாக அதே மீடியாவில் பார்க்கிறேன். கணவன்-மனைவிக்குள், அல்லது காதலன் காதலிக்குள் வரும் பிரச்சனையை அவர்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை பொதுவெளிக்கு கொண்டு வரக்கூடாது.

என் கணவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால், அதை என் கணவரிடம் தான் விவாதிக்க வேண்டும். அதை விவாதிக்க வேண்டிய இடம் மீடியா இல்லை. இதை வெளியில் பேசுவதால், ‘நான் எவ்வளவு உண்மையா இருக்கேன் பார்த்தீங்களா’ என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல. ஆனால், அது உண்மை கிடையாது. நீங்கள் ஒரு விஷயத்தை மீடியா முன் பேசும் போது, அது உங்களையும் பாதிக்கும். உங்களையும், உங்கள் கணவரையோ, காதலரையோ சார்ந்த விஷயம் என்றால், அதை மீடியாவில் பேச வேண்டியதில்லை.

நாம் கீழே விழுந்தால், யாராவது அருகில் இருப்பவர்கள், ‘ஏன் விழுந்தீங்க… அடிபட்டுடுச்சா?’ என்று கேட்பார்கள், அது போல இதுவும் ஒருவிதமான அனுதாபத்தை தேடும் முயற்சிதான். அது ஒரு போதை மாதிரி. அந்த அளவிற்கு பலவீனமாக நம்மை வைத்திருக்கக் கூடாது. வீடு, கார் என எல்லாமே லோன் போட்டு தான் வாங்கியிருக்கோம். கொரோனா வந்த போது நிகழ்ச்சியே இல்லை. கையில் பணமும் இல்லை. அதை கடந்து இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். கடன் வாங்கி செலவு பண்றோம். அதே மாதிரி ஒரு சூழல் வந்துட்டா என்ன பண்றதுனு அவரிடம் கேட்பேன்.

‘கட்ட முடியலைனா பேங்க் எடுத்துக்கும்… நமக்கு கிராமத்தில் சொந்தமா ஒரு வீடு இருக்கு.. அது போதும்’ என்று அவர் கூறுவார். இந்த தெளிவு இருக்கு, அது போதும் என்று கூறினேன்”. என்று ராஜலட்சுமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Chella

Next Post

காதல் கணவர் மரணம்..!! சாப்பாட்டிற்கே காசு இல்லாமல் கஷ்டப்பட்ட சன் டிவி சீரியல் நடிகை..!!

Wed Jun 21 , 2023
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யபிரியா. இவர், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சத்யபிரியா வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்யபிரியா தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் இருந்து இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு சத்தியபிரியாவின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த […]
காதல் கணவர் மரணம்..!! சாப்பாட்டிற்கே காசு இல்லாமல் கஷ்டப்பட்ட சன் டிவி சீரியல் நடிகை..!!

You May Like