fbpx

”வீட்டையே இரண்டா மாத்திட்டோம்.. விளையாட்டு என்னவாகும்”..? கமல்ஹாசனின் புதிய வீடியோ..!!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-7 சமீபத்தில் ஆரம்பமானது.

இதையடுத்து, வரும் 1-ஆம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன்-7 ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாக இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், விஜய் டிவி மற்றொரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் கமல்ஹாசன் கூறுகையில், “விளையாட்டினால் சில பேர் மாறி இருக்காங்க, சில பேர் விளையாட்டையே மாற்றி இருக்காங்க, ஆனால் இந்த வாட்டி வீட்டையே மாற்றி இருக்கோம், விளையாட்டு என்ன ஆகுதுன்னு பார்ப்போம்” எனக் கூறி இருக்கின்றார். இந்த வீடியோவில் கமல் கூறிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரித்துள்ளது.

Chella

Next Post

சாலையில் வைர கற்களை த் தேடி ஊர்ந்து சென்ற மக்கள்….! குஜராத்தில் பரபரப்பு, கடைசியில இப்படியாக ஆகணும்….?

Wed Sep 27 , 2023
பொதுவாக சமூக வலைதளங்கள் மூலமாக, பல்வேறு வதந்திகள் அவ்வப்போது பரப்பப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அப்படி பரப்பப்படும் வதந்திகளை நம்பி, பொதுமக்கள் அவ்வப்போது ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது உண்மையா? அல்லது வெறும் வதந்தியா? என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு இன்னமும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற சூரத் நகரத்திற்கு அருகே வரச்சா […]

You May Like