சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உடன் அசல் கோலார் எல்லை மீறி பழகி வருவதே ரசிகர்களை ரொம்ப கடுப்பாக்கி இருக்கிறது. நிவாஷினிக்கு அசல் அப்படி நடந்து கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அவரும் அசல் படுக்கைக்கு சென்றெல்லாம் இரவு நேரத்தில் அவருடன் விளையாடி வருகிறார். ஆனால், அதே போல குயின்ஸி, ஜனனி உள்ளிட்ட மற்ற பெண் போட்டியாளர்களிடம் அசல் கோலார் அத்துமீறி நடந்து கொள்வது தான் ரசிகர்களை மேலும், கோபமடைய செய்கிறது.

அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் காஜி பிடித்து அலைகிறார் என்றும் தினம் ஒரு சில்மிஷம் செய்கிறார் என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து அவர் வீட்டுக்குள் மற்ற பெண் போட்டியாளர்களுடன் நடத்தும் லீலைகளை சோஷியல் மீடியாவில் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆண் போட்டியாளர்கள் மத்தியில் உன்னை பார்க்கவே முடியலையே ஏன்? என்றும் அசல் கோலாரை ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்தே பெண் பித்துப் பிடித்தது போலவே அசல் கோலார் சுற்றி வருகிறார். அவரை உடனடியாக இந்த வாரம் எவிக்ட் பண்ணி வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து அசலுக்கு ஓட்டுக்களையும் போடாமல் உள்ளனர். ஆனால், உள்ளே நிவாஷினி உடன் செம ஜாலியாக எல்லா சில்மிஷ விளையாட்டுகளையும் விளையாடி வருகிறார் அசல் கோலார்.

பொம்மை டாஸ்க்கில் எப்படி அட்டாக் பண்றது என விக்ரமன் உடன் மகேஸ்வரி பேசி விளையாடுவது போல நடித்துக் காட்ட இது நல்லா இருக்கே, வா என்னுடனும் வந்து விளையாடுங்க என அசல் கோலார் நாக்கை எல்லாம் ஒரு மாதிரி பண்ணி கூப்பிட்ட காட்சிகள் பிக்பாஸ் ரசிகர்களை அருவருக்க வைத்துவிட்டது. மகேஸ்வரி போடான்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதனைத் தொடர்ந்து வந்ததில் இருந்தே குயின்ஸியின் கையை நோண்டுவது, அவரை சீண்டுவது என பேட் டச் செய்து வருகிறார் அசல். குறிப்பாக அசல் பக்கத்தில் உட்கார்ந்தாலே எழுந்து வேறு இடத்துக்கு சென்று வருகிறார் குயின்ஸி.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக குயின்ஸியின் கால் மீது இவர் தனது இரு கால்களையும் போட்டு படுத்திருக்கும் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அசல் கோலார் பண்ணுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் ஷோவில் இருக்கிறோமே என ரொம்பவே பொறுமையை கையாண்டு வரும் குயின்ஸி, கால எடுடா என சொல்லியும் அதை கேட்காமல் அசல் கோலார் அப்படியே அவர் மீது கால் போட்டு ஃபிரெண்டுன்னா அப்படிதான் இருப்பாங்கன்னு சொல்றாரு.

அப்போது அங்கே வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், காலை எடுடா என்றும் அவங்க வீட்ல பார்த்தா என்ன நினைப்பாங்க என்றும் பச்சையாக கேட்டும் கொஞ்சம் கூட சொரணையே இல்லாத மாதிரி சிரித்துக் கொண்டு அசல் கோலார் செய்யும் சில்மிஷ வீடியோவை பிக்பாஸ் ரசிகர்கள் ஷேர் செய்து முதலில் இந்த லூசை வெளியே அனுப்புங்க முடியலடா சாமி என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
