விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் 2 வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
அந்தவகையில், செப்டம்பர் 24ஆம் தேதி அல்லது அக்டோபர் 7ஆம் தேதி பிக்பாஸ் தொடங்கும் என கூறப்படுகிறது. அத்தோடு இந்த சீசனில் மாகாபா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரசிகர்கள் பலரும் எதற்காக இந்த சீசனில் இரண்டு வீடுகள் எனக் கேட்டு வந்திருந்தனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
அதாவது ஒரு வீட்டில் ஆண்களும், மற்றொரு வீட்டில் பெண்களும் தங்க வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரசிகர்கள் இப்படிப் பிரித்துப் பிரித்து வைத்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் எனவும், ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்களையும், பெண் போட்டியாளர்களையும் வைத்திருந்தால் தான் காதல், கலாட்டா எல்லாம் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.