fbpx

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் மர்ம பெண் ஊமை ராணி யார் ?

பொன்னியின் செல்வன் பாகம் 1ல் காட்டப்படும் ஊமை ராணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் பாகம் 1ல் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் , ஆழ்வார்க்கு அடியான் ஆகிய மூன்று பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அருள்மொழிவர்மனை கொலை செய்ய வரும் கும்பல் தாக்கத் தொடங்கும். அப்போது அவர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்துவிடும். இறுதியாக இக்கட்டான ஒரு கட்டத்தில் யானை மீது ஒரு பெண் வந்து அருள் மொழியை காப்பாற்றுவார். அப்போது எனக்கு ஏன் பொன்னியின் செல்வன் என பெயர் வந்தது தெரியுமா ? என வந்தியத்தேவனிடம் கேட்பார். ஆம், தெரியும் பொன்னி ஆற்றில் விழுந்துவிட்டீர்கள் பொன்னித்தாய் காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என பெயர் வந்தது என வந்தியத்தேவன் கூறுவார்.

அதற்கு இல்லை, என்னைக் காப்பாற்றியது பொன்னித் தாய் இல்லை. இப்போது என்னை காப்பாற்றினாரே ஊமை ராணி அவர்தான் என்னை காப்பாற்றியவர். அவர் யார் என எனக்கு தெரியாது பார்ப்பதற்கு பரிட்சயமான முகம் போலத்தான் தெரிகின்றார். என ஊமைராணியைப் பற்றிகூறும்போது யார் அந்த ஊமை ராணி என்பதையும் இவர் கூறியதில் உள்ள ட்விஸ்டையும் தெரிந்து கொள்ள நம்மிடையே ஆர்வம் தூண்டும். இறுதியில் பொன்னியின் செல்வன் 2023 பாகம் 2 என படம் முடியும்போது ஊமைராணி கடலில் நீந்தி வருவார். யார் அவர் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது வயதான பெண்மணியாக இருப்பவரும் ஐஸ்வர்யா ராய்தான்…

இதனால் அடுத்து வரும் பாகத்தில் ஊமைராணியைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது எனலாம். இது நாவலை படித்திராதவர்களுக்கு ஸ்வாரஸ்யமானதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கக்கூடும். இந்த ஊமை ராணி , உண்மையில் மந்தாகினி தேவி. காது கேளாத , வாய்பேசாத ஊமைராணி நந்தினியின் தாய்… இதை நாவல் ரசிகர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள்.

மந்தாகினிக்கும் அருள்மொழிக்கும் எப்படி தொடர்பு ? அருள் மொழிக்கும் மந்தாகினிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் , ஏன் அருள்மொழி வர்மனை அவர் பாதுகாக்கின்றார் என்பதும் தான் அடுத்து வரும் கதை . இதை பாகம் 2ல் பார்க்க முடியும் .மந்தாகினி  , சக்கரவர்த்தி சுந்தர சோழன் அரசானவதற்கு முன்பு காதலித்தாள். ஆனால் திருமணம் செய்ய முடியவில்லை. பின்னர் வேறொரு நபருடன் திருமணம் ஆகி 2 குழந்தையை பெற்றெடுப்பார். அதில் முதலாவது குழந்தைதான் நந்தினி. இரண்டாவது குழந்தை .

பாகம் 2ல் மந்தாகினியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஒரு பாத்திரமாக இருக்கும். அவரது சோகமான பின்னணி அடுத்தடுத்த கதைகளில் இடம்பெறும் என நம்பப்படுகின்றது.

நாளுக்குநாள் பொன்னியில் செல்வன் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். 3வது நாளான இன்று ரூ.200 கோடி வசூலித்துள்ளது பொன்னியின் செல்வன். நாவல் ரசிகர்களும் , புத்தகம் படிக்காதவர்களும் திரையில் காண திரையரங்கை நோக்கி படையெடுக்கின்றனர்.

Next Post

ஒரு கோடி இந்தியர்களின் கணக்கை முடக்கிய வாட்ஸ் அப் நிறுவனம்...! திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

Mon Oct 3 , 2022
ஒரு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே நேரம் போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது. இதனால், வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம், பல்வேறு கணக்குகளையும் அதிரடியாக முடக்கி வருகிறது. அரசின் புதிய விதிகள் காரணமாகவும் இந்த […]

You May Like