கடந்த 2021ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் விஜய் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில் நேற்றிரவு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்போஸ்டர் வெளியான நேரம் முதல் சிறந்த வரவேற்பை பெற்று வருவதோடு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அந்தவகையில் இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்புறத்தில் ஒரு கை மேலோங்கி இருப்பது போன்று உள்ளது. இதனால் அந்த கை யாருடையது? இந்த போஸ்டர் சொல்ல வருவது என்ன என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு இடையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.